2022ம் ஆண்டில் நிலாவில் வசிக்கலாம்: நாசா நம்பிக்கை

moon_nasa_001மனிதர்கள் இன்னும் 6 ஆண்டுகளில் நிலாவில் வசிக்கலாம் என்று நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலாவில் மனிதர்களை வசிக்க வைப்பதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.

ஒரு வேளை இந்த முயற்சி சாத்தியப்பட்டால் அது மனிதக்குலத்தின் உச்சக்கட்ட சாதனையான விளங்கும். இதற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 பேர்கள் வரை தங்கக்கூடிய வகையில் நிலாவில் வரும் 2022 ஆண்டுக்குள் தளம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 10 பில்லியன் டொலர்கள் வரை செலவு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் செவ்வாய் கிரகத்தில் தளம் அமைப்பது தொடர்பான தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

எனவே அதற்கு முன்பாகவே நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்காக தளத்தை அமைக்கும் சவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு நிலாவில் தளம் அமைப்பது தான் அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com