ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டியடித்து பல்மைரா நகரை கைப்பற்றிய சிரியா இராணுவம்

palmyra_001உலகின் மிக பழமையான பாரம்பரிய கட்டிடங்களை கொண்ட சிரியா நகரான பல்மைரா நகரை கடந்த ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி, சிரிய இராணுவத்தினருடன் போராடி, ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்நகரை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முன்னேற்றத்தை அடுத்து அங்கு போரிட்டுக்கொண்டிருந்த சிரிய ராணுவமும் பின்வாங்கியது.

யுனஸ்கோவால், மிக பழமையான பாரம்பரிய சின்னங்கள் என்று வரிசைபடுத்தியிருக்கும் ஏராளமான இடிபாடுடன் கூடிய கட்டிடங்கள் பல்மைரா நகரில் இருப்பதால், அவைகளை ஐஎஸ் பயங்கரவாதிகள் வெடி வைத்து தகர்த்து விடுவார்களோ என்ற அச்சம் கொண்டது.

இந்நிலையில், அந்நகரை கைப்பற்ற சிரிய இராணுவத்தினர் போராடிய முயற்சி வெற்றியில் முடிந்துள்ளது, தீவிரவாதிகளை விரட்டியடித்து அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டுவந்து விட்டதாக சிரிய இராணுவம் அறிவித்துள்ளது.

-http://world.lankasri.com