ஐ.எஸ்.தலைவர் ஒரு சாதாரண குடும்பஸ்தர்: சொல்கிறார் முன்னாள் மனைவி!

baghdadi_exwife_001ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் வெறும் ஒரு சாதாரண குடும்பஸ்தராகவே இருந்தார் என அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பை துவங்கும் முன்னர் அல்-பக்தாதி அக்கறை கொண்ட குடும்பஸ்தனாகவே இருந்து வந்துள்ளதாக அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் மதம் மற்றும் ஷாரியா சட்டங்கள் குறித்து வகுப்புகள் நடத்தி வந்த ஹிஷாம் முகமது என்பவர்தான் பின்னாளில் ஐ.எஸ். தலைவராக உருமாறினார்.

பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த காலத்தில் தான் தமக்கு அவருடன் திருமணம் நடைபெற்றது என கூறும் 28 வயதான சாஜா அல் துல்மைமி,

குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட மனிதராகவே அல் பாக்தாதி அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பணி முடித்து நேரம் தவறாமல் வீடு வந்து சேரும் அவர், அரசியல் எதிர்ப்பு இயக்கங்களில் கூட கலந்து கொண்டதில்லை என்றுள்ளார்.

ஆனால் மிகவும் ஆபத்தானதும் கொடூரமானதுமான ஒரு அமைப்புக்கு அவர் எப்படி தலைவரானார் என்பது இன்றளவும் புரியாத புதிராகவே இருப்பதாய் சாஜா தெரிவித்துள்ளார்.

அல் பாக்தாதிடம் இருந்து ஒருவழியாக தப்பித்து வந்த பின்னர் தமது மூன்றாவது கணவருடன் வாழ்ந்துவரும் சாஜா, தமது மகளை பாக்தாதி எந்த நேரத்தில் கடத்திச் செல்ல வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களை கொலைகாரர்களின் மிருகத்தனம் என கூறும் சாஜா, ஆயுதங்களால் அப்பாவி மக்களை கொலை செய்வது பயங்கரவாதம் அல்ல கொலை என்றார்.

-http://world.lankasri.com