சீனாவில் இதயம், நுரையீரல் வீணாகும் அவலம்: காரணம் என்ன?

organs_001சீனாவில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் வீணாக்கப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசியாவிலேயே மனித உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் சீனா முதலிடம் வகிக்கிறது.

கடந்தாண்டு மட்டும் 2760 நபர்களிடம் இருந்து நுரையீரல்கள் தானமாக பெறப்பட்டுள்ள, ஆனால் இதில் 150 மட்டுமே நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் வீணாவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு உடல் உறுப்புகளை பாதுகாக்க தரமான மருத்துவமனைகள் இல்லாததும், மருத்துவர்கள், ஊழியர்கள் இல்லாததே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஜியாங் ஸு மாகாணத்தில் வுசூ நகரில் உள்ள முன்னணி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சென் சிங் யூ கூறுகையில், சீனாவை பொறுத்தவரையில் மூளைச்சாவு அடைந்த ஒரு வாரத்திற்கு பிறகு உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுவதாகவும், இதன் காரணமாகவே இதயம், நுரையீரல் வீணாவதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் ஒப்பிடுகையில் மேற்கத்திய நாடுகளில் மூளைச்சாவு அடைந்த 42 மணிநேரத்திலேயே உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com