தற்கொலை அங்கி சந்தேக நபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தன் வலியுறுத்து!

r_sambanthan_001சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கியுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்

அதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ள அவர்,

சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் பரந்துபட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டு தொடர்புடைய அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு செயற்பாட்டையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் வடக்கின் தமிழ் மக்கள் பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள். அவர்களுடன் இணைந்து செயற்படவும் மாட்டார்கள் என்றும் ஆர். சம்பந்தன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: