பனாமா ஆவண விவகாரம்: சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பெயர் சேர்ப்பு?

redcrossபனாமா ஆவண விவகாரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பனாமா நாட்டில் உள்ள MossackFonseca நிறுவனங்களில் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் ரகசிய முதலீடுகள் வைத்து வரி ஏய்ப்புகள் செய்ததாக அண்மையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இந்த புகார்களை தொடர்ந்து ஐஸ்லாந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களை நிலைகுலையச் செய்தது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின்(ICRC) பெயரும் அந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக அச்சங்கத்தின் தலைவரான PeterMaurer என்பவர் இன்று சுவிஸ் பத்திரிகை ஒன்றிற்கு பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

அதில், ‘பனாமா நிறுவனங்களில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு எந்த கணக்கும் கிடையாது. அந்த நிறுவனங்களிலிருந்து எந்த நிதியையும் இதுவரை பெறவில்லை.

ஆனால், செஞ்சிலுவை சங்கத்தின் பெயர் அந்த ஆவணங்களில் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இந்த அவதூறான தகவல் எதிர்த்து உடனடி விசாரணை நடத்தப்படும் என PeterMaurer தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com