“அமெரிக்க ஜனாதிபதியாக நான் செய்த மிகப்பெரிய தவறு”: மனம் திறந்த ஒபாமா

obama_feel_001அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு தான் செய்த மிகப்பெரிய தவறு எது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா மனம் திறந்து பேசியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒபாமா பங்கேற்றுள்ளார்.

அப்போது, ‘ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஏற்பட்ட நன்மைகள் தீமைகள் எவை’? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஒபாமா ’மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஏற்பட்ட புரட்சியை கட்டுப்படுத்த தவறியதே அமெரிக்க ஜனாதிபதியாக நான் செய்த மிகப்பெரிய தவறு’ என ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், ‘லிபியாவில் நிகழ்ந்த உள்நாட்டு போரை தடுக்க அமெரிக்க நுழைந்தது சரியான முடிவு தான்.

ஆனால், 2011ம் ஆண்டு லிபியாவின் அதிபரான கடாபி கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு ஏற்பட்ட மோசமான புரட்சியை கட்டுப்படுத்த தவறி விட்டேன்.

லிபியாவில் பிரிவினைவாதிகள் தோன்றி கலவரங்கள் ஏற்படுவும், ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செய்வதையும் கட்டுப்படுத்த தவறி விட்டேன்.

இதனால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் சூழல் ஏற்பட்டது’ என ஒபாமா மனம் திறந்து பேசியுள்ளார்.

-http://news.lankasri.com