சமஷ்டியை பிரிவினை என தினேஸ் கூறுவது விந்தையாகும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்

vikneshvaranசமஷ்டி தீர்வை பிரிவினை வாதம் என தினேஸ் குணவர்தன போன்ற படித்தவர்கள் கூறுவது மிகவும் விந்தையாக உள்ளது. என தெரிவித்திருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தினேஸ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தன சமஷ்டி தீர்வை சரியான தீர்வு என்றார்.அவருடைய மகன் பிரிவினைவாதம் என்கிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள போது எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன. கடந்த காலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு நடந்ததே முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் நடக்கும் என தெரிவித்திருக்கின்றார்.

தினேஸ் குணவர்தனவின் குறித்த கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

தினேஸ் குணவர்தன அவருடைய தந்தை பிலிப் குணவர்தன போன்றே மிகவும் படித்த ஒருவர். ஆதனால் எங்களால் மதிக்கப்படும் ஒருவராகவும் அவர் இருந்திருக்கின்றார்.

நான் கொழும்பு றோயல்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது பிலிப் குணவர்தன எமது பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அப்போது எங்கள் பாடசாலையில் இடதுசாரிகளை நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை. நானே அவரை நிகழ்வுக்கு அழைத்திருந்தேன்.

அப்போது மாணவர்களுடைய கேள்வி நேரத்தில் மாணவன் ஒருவன் கேட்டிருந்தான் சமஷ்டி என்பது தவறானதா என அதற்கு பதிலளித்த பிலிப் குணவர்தன சமஷ்டி சிறந்த தீர்வு என பிரதமரே கூறியிருக்கின்றார், பின்னர் எப்படி பிழையாக முடியும். என அவருடைய மகனே இப்போது சமஷ்டி பிரிவினைவாதம் என கூறிக் கொண்டிருக்கின்றார்.

மேலும் வரதராஜப்பெருமாளுக்கு நடந்ததே எனக்கும் நடக்கும் என தினேஸ் குணவர்தன கூறியிருக்கின்றார்.

வரதராஜப்பெருமாள்வடகிழக்கு மாகாணங்களை தனி அலகாக தன்னிச்சையாக அறிவித்தார். ஆனால் நாங்கள் கேட்டிருப்பது சமஷ்டி. சமஷ்டி என்பது நாட்டை பிரிக்காமல் அந்த நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் அடையாளங்களை பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கான ஒரு தீர்வு முறையாகவே இருக்கின்றது.

குறிப்பாக இந்தியாவில் மாநிலங்கள் தங்கள்மொழிகள் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மேல் பிரிட்டனிடம் இருந்து ஸ்கொட்லாண்ட், பிரான்ஸிடமிருந்து கியூபெக் போன்றன பிரிந்து தனியே போக விரும்பாமல் ஒன்றாக சமஷ்டி அடிப்படையில் இணைந்து வாழ்கின்றன.

மேலும் தினேஸ் குணவர்தன கூறியிருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இ ருக்கின்ற போது வடமாகாணசபை தனியாக தீர்வு திட்ட முன்மொழிவுகளை முன்வைப்பதாக, இந்தக் கருத்து ஒரு படித்த மனிதர் கூறும் பதிலா என கேட்க நினைக்கிறேன்.

இந்த நாட்டில் உ ள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் அந்த உரித்து உள்ளது. மேலும் நாங்கள் கட்சியுடன் ஆராய்ந் த பின்னதாகவே இந்த முன்மொழிவுகளை தயாரித்துள்ளோம், கட்சியின் கடப்பாடுகளுக்கு வெளியே செல்லவில்லை.

இதேபோல் வட மாகாணசபை மே மாதத்தில் பிரிந்து தனியாக செல்வதற்கான பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர் ச்சியாக நடந்து வரும் விடயம். இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு சாதகமான தீர்வு திட்டங்கள் வருகின்ற போது எதிர்கட்சிகள் தமிழர்களை பிரிவினைவாதிகளாககாட்டி தங்களுடைய நலன்களை பெற்றுக் கொண்டு விடுவார்கள்.

இதனையே ஒன்றிணைந்த பொது எதிரணியும் செய்ய நினைக்கிறார்கள். இவ்வாறான பேச்சுக்களினாலேயே 1983ம் ஆண்டு இனக் கலவரம் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

எனவே வட மாகாணசபையில் நாங்கள் விடுகின்ற சில பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்துதமிழர்களை பிரிவினைவாதிகளாக சித்தரித்து உங்கள் சுயலாபங்களை பெற்றுக் கொள்ள விரும்பாதீர்கள் என முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: