சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. இதனை அடுத்து யூட் செபஸ்டியன் என்னும் 32 வயது நபர் கைதாகியுள்ளார். இவர் 13 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர். பின்னர் 2009ம் ஆண்டு , சிங்கள புலனாய்வாளர்களோடு இணைந்தவர். இயக்கப் பெயர் ஜக்ஸன். கடல் புலிகளில் இருந்த ஜக்ஸன் , கஞ்சா கடத்தல் , வெடி போட்டு மீன் பிடிப்பவர்களு வெடி மருந்து கொடுப்பது. அதனை ராணுவப் புலனாய்விடம் இருந்து பெற்று. அதற்கான காசை ராணுவத்திற்கு கொடுப்பது என்று பல டீலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருக்கு ஒரு மனைவி , மன்னாரில் ஒரு கள்ளக் காதலியும் உண்டு. கள்ளக் காதலி சொல்லிக் கொடுத்து தான் பொலிசார் இவர் வீட்டை சோதனையிட்டார்கள் என்பது எல்லாம் உண்மைக்கு புறம்பான விடையம். சில மாதங்களாக , ஜக்ஸன் ராணுவத்திற்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். பெருந்தொகையான பணத்தை ஜக்ஸன் ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுக்காமல் தண்ணி காட்டிவந்தவேளை. ஆத்திரமடைந்த அவர்கள் ஜக்ஸன் வீட்டில் வெடிகுண்டுகளையும் தற்கொலை அங்கியையும் வைத்துள்ளார்கள்.
ஏற்கனவே யாழில் ஒரு பிரபல புள்ளி, ஹோட்டல் ஒன்றை கட்டி அதனை திறந்துவைக்க மைத்திரி தான் வரவேண்டும் என்று படாதபாடு பட்டு அனுமதி பெற்றிருந்தார். இன் நிலையில் யாழுக்கு மைத்திரி வருவது சிங்கள புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்கனவே தெரியும். எனவே தற்கொலை அங்கியை ஜக்ஸன் வீட்டில் வைத்தால், என்ன நடக்கும் என்று சொல்லவா வேண்டும் ? அவர்களே பொலிசாருக்கும் தகவலை கொடுக்க பொலிசார் ஜக்ஸனை கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டார்கள். 2009ம் ஆண்டு போர் நிறைவுபெற்ற காலப் பகுதியில் , புலிகள் இயக்கத்தில் இருந்து ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற ஜக்ஸன் இதுவரை புணர்வாழ்வு முகாமுக்கு செல்லவில்லை.
அவர் தனது சிங்கள தொடர்புகளை வைத்து தப்பிவிட்டர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
-http://www.athirvu.com