ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற மத்திய தரைக்கடல் வழியாக வந்த 400 அகதிகளை தாங்கிய படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பாக சோமாலியா நாட்டை சேர்ந்த சுமார் 400 அகதிகள் நேற்று படகு ஒன்றில் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணமாகியுள்ளனர்.
ஆனால், புறப்பட்ட அந்த படகு நடுக்கடலில் மூழ்கி விட்டதாகவும், அதில் பயணம் செய்த 400 அகதிகள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
எகிப்து நாட்டை சேர்ந்த ஒரு தூதரக அதிகாரி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அகதிகள் பயணிக்கும் படகுகள் அளவில் சிறியதாகவும், ஆனால், அதிக எண்ணிக்கையில் நபர்கள் பயணம் செய்வதால் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன.
ஐ.நா சபை அண்மையில் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் சுமார் 1,80,000 அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா நாடுகளுக்குள் நுழைய முயன்றதாகவும், இவர்களில் 800 பேர் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-http://news.lankasri.com