பிரபாகரன் ஈழத்தை தவிர எதனையும் ஏற்க்க மாட்டார் என்று எனக்கு தெரியும்

 

வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது. இருந்த போதிலும் ஆளும் மைத்திரி- ரணில் அரசு தேசிய இனப் பிரச்சனைத் தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது என்கிறார்கள் சிலர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் காணப்படுகின்ற நிலையில் தீர்வு சாத்தியமா? என்ற சந்தேகங்களும் உள்ளன. 1994- 1995 இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானித்தபோது காணப்பட்ட  புறச்சூழல்களை சந்திரிகா இவ்வாறு விபரிக்கிறார்.

புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனுபவஸ்தர்களை ஈடுபடுத்தாதது குறித்து பலத்த விமர்சனம் எழுந்தது. தோல்வியில் முடிவடையும் என எச்சரிக்கைகள் எழுந்தன. ஆனால் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை நோர்வே பல சந்தர்ப்பங்களில் ஈடுபடுத்தியபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. எனவே அவ்வாறான விமர்சனங்களை நான் ஏற்கவில்லை. பிரபாகரனும் நானும் சுமார் 42 அல்லது 43 கடிதங்கள் பரிமாறினோம்.  அதன் மூலம் பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார் சந்திரிக்கா. எனவே ஈழத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் வடக்கில் ஏதாவது வேலைகள் செய்யவேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்தது. அப் பகுதி போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் அப் பிரதேசம் கவனிப்பாரற்ற பிரதேசமாக இருந்தது. அம் மக்கள் பிரபாகரனைப் பின் தொடர்வதற்கு அதுவே பிரதான காரணமாக இருந்தது.

எனவே நாம் சாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பாடசாலைகள், மீன்பிடி, துறைமுகம் போன்றவற்றைத் திருத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்தோம். இதனை நிறைவேற்ற எங்களை அனுமதிப்பீர்களா? என எனது கடிதத்தில் கேட்டிருந்தேன்.

ஈழம் கிடைத்ததும் நாமே அதனைச் செய்வோம் என பிரபாகரனின் பதில் இருந்தது. இவ்வாறு தனது அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: