சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேம், மாநில பிஎன் பங்காளிக் கட்சியான அம்னோ சரவாக்கில் நுழைந்தால் பதவி துறக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
“அம்னோ சரவாக் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இதை அம்னோ தலைவரிடமே (பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்) தெரிவித்திருக்கிறேன். அம்னோ சரவாக்கில் கால் வைக்காது.
“தேர்தலின்போது வந்து உதவி செய்வார்கள் ஆனால், சரவாக்கில் கிளைகளை அமைக்க மாட்டார்கள். ஏனென்றால் சரவாக்கில் பிஎன் மிக வலுவாக உள்ளது.
“நான் முதலமைச்சராக இருக்கும்வரை அவர்கள் வர மாட்டார்கள். அவர்கள் இங்கு வந்து கிளைகளை அமைத்தால் நான் பதவி துறப்பேன்”, என மீரியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது அடினான் குறிப்பிட்டார்.
மாநில பிஎன் தலைவருமான அடினான், முன்பு அம்னோ சாபாவுக்கு வந்ததற்கு “சாபா பிஎன் பலவீனமாக இருந்தது”தான் காரணம் என்றும் சரவாக் பிஎன் “வலுவாக” உள்ளது என்றும் சொன்னார்
எல்லாம் டிராமா காதுல பூ…..
சரவாக் முதலமைச்சரே! பாதகா உன்னுடைய நாடகத்தை இத்தோடு நிறுத்திகொள் இல்லையேல்…உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் நல்ல சாவே இல்லை என்பதை காலம்தான் பதில் சொல்லும்