ஈக்வாடர் நிலநடுக்க சேதாரத்தை ஈடுசெய்வது எப்படி?: அதிரடி முடிவு எடுத்த ஜனாதிபதி

earthquakeஈக்வாடர் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேதாரங்களை ஈடுசெய்ய அந்நாட்டு ஜனாதிபதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஈக்வாடர் நாட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட 7.8 அளவுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 570 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகளும் பொது சொத்துக்களும் சேதாரம் ஆனதால், இவற்றை சீர்ப்படுத்த சுமார் 3 பில்லியன் டொலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈக்வாடர் நாடு தன்னுடைய கச்சா எண்ணெய் வளம் மூலம் வருமானத்தை திரட்டி வருகிறது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலையும் குறைந்துள்ளதால், ஈக்வாடர் நாடு கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.

இந்நிலையில், நிலநடுக்க சேதாரத்தை ஈடுசெய்ய ஜனாதிபதி ஒரு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, நடப்பாண்டில் மட்டும் நாடு முழுவதும் விற்பனை வரியை 12 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரு மில்லியன் டொலர் சொத்துக்கள் வைத்துள்ள பெரும் பணக்காரர்கள், அவர்கள் வைத்திருக்கும் சொத்தில் 0.9 சதவிகிதம் அரசாங்கத்திற்கு ஒரு முறை மட்டும் செலுத்த வேண்டும்.

அதேபோல், 1,000 டொலர் வரை ஊதியம் பெறும் ஒரு நபர் அவருடைய ஒரு நாள் ஊதியத்தை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.

2,000 டொலர் பெரும் ஊழியர் இரண்டு நாட்கள் ஊதியம் என 5,000 டொலர் வரை ஊதியம் பெறும் நபர் ஐந்து நாட்கள் ஊதியத்தை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

மேலும், நாடு முழுவதும் உள்ள அடையாளம் காணப்படாத அல்லது உரிமையாளர் இல்லாத சொத்துக்களை அரசாங்க உடனடியாக விற்பனை செய்து நிதி திரட்டும் என ஈக்வாடர் ஜனாதிபதியான RafaelCorrea தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com