முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மீண்டும் கோலாலம்பூர் சாலைகளுக்கு வருகிறார்.
மே தினத்தன்று மகாதீர் முகமட்டும் சிலாங்கூர் மாநில மந்திரிபுசார் அஸ்மின் அலியும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) ஏற்பாடு செய்யும் மே தின பேரணியில் கலந்துகொள்கிறார்.
பிரதமர் நஜிப்புக்கு எதிரானப் போராட்டம் தொடங்கியதிலிருந்து மகாதீர் தெருப் போராட்டங்களிலும், பொதுப் பேரணிகளிலும் பங்கேற்பது வழக்கமானதாகி விட்டது. அவர் பிரதமராக இருந்த காலத்தில் இவற்றை பொறுத்துக்கொள்வதே இல்லை.
மே தின கூட்டத்தில் மகாதீர் கலந்துகொள்கிறார் என்பதை அறிவித்த எம்டியுசியின் இடைக்காலத் தலைவர் அப்துல்லா சானி அப்துல் ஹமிட், இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், அவர்கள் உள்நாட்டினரோ வெளிநாட்டினரோ, தேசிய அளவில் நல்லமுறையில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இக்கூட்டத்தில் 10,000 லிருந்து 20,000 பேர் வரையில் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
காலம் கடந்த ஞானோதயம். . பரவாஇல்லை. இவராவது தான் செய்த தவற்றுக்கு இன்று தெருவில் வந்து மக்களுடன் போராடுகிறார். நமது தமிழ் கட்சிகள் என்று கூறும் அவலங்கள் இன்னமும் எல்லா விசயத்திற்கும் வாய்மூடி பேடித்தனமாக இருப்பதை என்னவென்று சொல்வது.
அன்று தெரு போராட்டம் தேவையற்றது, இன்று தெரு போராட்டம் இன்றியமையாதது என்ற நிலைக்கு வந்து விட்டார் மகாதீர் !
பல்டி !
வா காகாவே வா.
அன்று ஹிண்ட்ராப் பேரணி தவறு, இன்று ? கடவுள் இருக்கின்றான் :))))
மகாதிர் மாமாக்..மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி அப்படிதானே உங்கள் கூற்று சபாஷ்!உங்களை பிடித்து உள்ளே போட எவனுக்கும் தில் இல்லையே இதுவே மற்ற இனத்தவரா இருந்தால்….ஐ.ஜி.பி.தொடைநடுங்கி எங்கேயா போனிங்க?மகாதிர் மாமாவுக்கு அவ்வளவு பயமா!