குவான் எங்: 4 மில்லியன் மக்களைக் காப்பாற்ற நீர் பற்றாக்குறையைத் தவிர்க்க நடவடிக்கை வேண்டும்

 

Guanengwatercrisisஅச்சுறுத்தும் நிலையிலிருக்கிற நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படவிருக்கும் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த நான்கு மில்லியன் மக்களைக் காப்பாற்ற உடனடியாகத் தலையிடுமாறு பினாங்கு மாநில அரசு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சூப்பர் எல் நிநோவால் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் வட பேராக் ஆகிய நான்கு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் துணைப் பிரதமர் ஹமிடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கும் வணிகச் சமூகத்திற்கும் சுமையையும் சிக்கலையும் விளைவிக்கக்கூடிய இந்த ஆபத்தான நிலையைத் தவிர்க்க தேசிய நீர் வளங்கள் மன்றத்தின் தலைவர் என்ற முறையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று லிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாம் ஆபத்து ஏற்படும் வரையில் காத்திருக்கக் கூடாது என்றாரவர்.

நீர் பற்றாக்குறையினால் ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க இன்னும் வாய்ப்பு இருப்பதால், தேசிய நீர் வளங்கள் மன்றம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று லிம் ஆலோசனை கூறியுள்ளார்.