ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் தனது பாதுகாவலனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈராக் நாட்டை சேர்ந்த 12 வயது யாஸிதி சிறுமி உள்பட 5 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 மாதங்களுக்கு முன்னர் கடத்தி சிறை வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிக்க எண்ணிய சிறுமி அதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ‘தனக்கு தூக்கம் வர வில்லை என்றும், அதனை தீர்க்க தூக்க மாத்திரை கொடுக்குமாறு தீவிரவாதி ஒருவனிடம் அந்த சிறுமி கேட்டுள்ளார்.
தீவிரவாதியும் சிறுமிக்கு தூக்க மாத்திரையை கொடுத்துள்ளான். ஆனால், அந்த தூக்க மாத்திரையை ரகசியமாக பாதுகாத்து வந்த சிறுமி அதனை தீவிரவாதி அருந்தும் தேனீரில் கலந்து அவன் தூங்கியதும் அங்கிருந்து தப்பியுள்ளார்.
சிறுமி மட்டுமின்றி அவருடன் 17 வயதான உறவின பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி தற்போது அவர்களது பெற்றோர்களுடன் சேர்ந்துள்ளனர்.
ஈராக் பாராளுமன்ற உறுப்பினரான Vian Dakhil என்பவர் இந்த தகவலை நேற்று உறுதி செய்துள்ளார்.
எனினும், சிறுமியின் உறவினர்கள் இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com
அவரின் துணிச்சலுக்கு நமது பாராட்டுக்கள்! இது சாதாரண விஷயம் அல்ல.ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து எந்நேரத்திலும் வரலாம்! உங்களுக்காக நான் வேண்டுகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்! வாழ்த்துகள்!