தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து 700 பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இவற்றில் சில, ரிக்டர் அளவுகோலில் 4.0 முதல் 6.0 அலகுகளாகப் பதிவாகின. தொடர்ந்து நிலஅதிர்வுகள் நேரிட்டு வருவதால் உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் இங்குள்ள 7 ஆயிரம் கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கிறது. 26 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 646 ஆக உயர்ந்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் குடும்பம் குடும்பாக வரிசையாக நிற்கும் மக்கள் சைகை காட்டி உணவு, தண்ணீர் கோருகின்றனர். நிவாரண முகாம்களில் மிக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
14 ஆயிரம் மீட்பு பணி வீரர்கள் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த பகுதியில் நிவாரண உதவிகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-http://news.lankasri.com