வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிராக உச்சிநீதி மன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்காக தனியான பிராந்தியம் அமைக்கப்பட வேண்டும் என வட மாகாண சபையால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் சிங்கள நகல் ஒன்றை பெற்றுத் தரக் கோரியே குறித்த மனு தாக்கல் இன்றைய தினம் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சீ.வீ.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி என்பன இலங்கைக்குள் வேறொரு அரசை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com