பெண்களை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிபர்- வடகொரிய சர்வாதிகாரியின் சொகுசு வாழ்க்கை அம்பலம்!

kim1அணு ஆயுத சோதனையால் உலக நாடுகளையும், தனது சர்வாதிகார ஆட்சியால் வட கொரியா மக்களையும் மிரட்டி வரும் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தையின் ரகசிய வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிங் ஜாங் இல் ஆவார், இவர் தனது ஆட்சியின் போது 17 அரண்மனைகளை ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக கட்டியுள்ளார்,

நாட்டினை ஆட்சி செய்து வந்தாலும், மறுபுறம் பள்ளி மாணவிகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்தவர் ஆவார், இராணுவ வீரர்களை அனுப்பி பள்ளி மாணவிகளை அழைத்து வரச் சொல்லும் இவர், தனது 17 அரண்மனைகளில் ஒரு அண்மனையில் அவர்களை அடைத்து வைத்திருந்துள்ளார்.

அப்பெண்களை தனது சொகுசு வாழ்க்கைக்கும், கழிவறைகளை சுத்தம் செய்தல், வீட்டினை சுத்தம் செய்தல் என தனது பணிப்பெண்களாக பயன்படுத்தியுள்ளார்.

பெண்கள் விடயத்தில் இவரது முதல் தேர்வு பள்ளி மாணவிகளாவர், வடகொரியாவின் தலைநகரான Pyongyang – இல் அமைந்துள்ள இந்த 17 அரண்மனைகளும் பல்வேறு வசதிகளுடன், பார்ப்பதற்கு ஆடம்பரங்கள் நிறைந்தவையாக இருக்கும்.

இங்கு நடைபெறும் சில விருந்துகளில் பள்ளிப்பெண்களை, பணிப்பெண்களாக பயன்படுத்தியுள்ளார்.

வடகொரியா மக்கள் வறுமையில் வாட அந்நாட்டை ஆட்சி செய்து வந்த இவரோ, ஆடம்பர வாழ்கையில் திளைத்துள்ளார், இவருக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த இவரது மகன் கிம் ஜாங் உன், தன் தந்தையை ஒரு படிமிஞ்சிவிட்டார்.

அணு ஆயுத சோதனையால் பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுவது, தன்னை மதிக்காத நபர்களை கொன்றுவிடுவது என இவரது ஆட்சி தொடர்ந்தது.

பொப் பாடகியை திருமணம் செய்த இவருக்கு ஒரு பெண் குழந்தைஉள்ளது, ஆரம்பத்தில் சர்வாதிகாரியாக மட்டுமே இருந்து வந்த இவர், நாளடைவில் தனது தந்தையின் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

தந்தை பள்ளிப்பெண்களை குறிவைத்தால், மகன் உயரமாகவும், அழகாகவும் இருக்கும் பெண்களை தெரிவு செய்துள்ளார்.

இராணுவ அதிகாரிகள் மூலம் அழகான பெண்களுக்கு குறிவைக்கும் இவர், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 17 அரண்மனைகளில் சொகுசு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

1990 ஆம் ஆண்டு வடகொரியாவில் நிலவிய கடும் வறுமையின் காரணமாக 4 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

பசியின் கொடுமையால் வடகொரியா மக்கள் எலிகள் மற்றும் பாம்புகளை வளர்த்து, அதனை உண்டு பசியாறினர், தற்போது வடகொரியாவில் எலிகளே கிடையாது என்று சொல்லலாம், அந்த அளவுக்கு மக்கள் எலிகள் மூலம் பசியாறியுள்ளனர்.

மேலே கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்தையும் Marie Claire என்ற வடகொரிய பெண்மணி ஊடகம் ஒன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இப்பெண்மணி, கிம் ஜாங்கின் தந்தையால் கடத்தப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக அரண்மனையில் வசித்துள்ளார், 2010 ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பித்து சென்ற இவர் தற்போது அந்நாட்டில் நடந்தவை குறித்து உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

-http://news.lankasri.com