வங்கதேசத்தில் ‘இந்து’ மதத்தைச் சேர்ந்த நபர் அடித்து கொலை: ஐ.எஸ் பொறுப்பேற்பு

bangladesh-mapவங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த தையல்காரர் ஒருவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமையன்று மத்திய வங்கதேசத்தில் உள்ள Tangail என்ற மாவட்டத்தில் உள்ள நிகில் என்ற தையல்காரரை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் அவரது கடையிலேயே நிகழ்ந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் இதுபற்றி கூறுகையில், நிகில் மீது கடந்த 2012ம் ஆண்டில், முகம்மது நபியை பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சில வாரங்கள் சிறையில் இருந்தார். பின்னர் விடுதலையானார்.

இந்நிலையில் அவர் தற்போது கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால், 2012ம் ஆண்டு நடந்த விடயத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தவுள்ளோம் என கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த படுகொலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-http://news.lankasri.com