மலையகத்திற்கு தனியான ஆட்சி முறை அவசியமில்லை!– திகாம்பரம்

Thigambaram-Palaniமலையகத்திற்கு தனியான ஆட்சி முறை அவசியமில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மலையகத்திற்கு தனியான ஆட்சி முறைமை தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மலையகப் பகுதிக்கு தனியான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்காக வட மாகாணசபைக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

எனினும் மலையகப் பகுதிகளுக்கு தனியான அலகு அவசியமில்லை.

வடக்கின் தமிழ் மக்கள் தனித்து வாழ்கின்றமை உண்மைதான், அதற்காக வடக்கு மாகாணசபை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

எனினும் நுவரெலியா, பதுளை, களுத்துறை, கண்டி உள்ளிட்ட தெற்கின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் சிங்கள மற்றும் ஏனைய இன சமூகங்களுடன் சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, தனியான ஆட்சி அதிகார முறைமை போன்ற யோசனைகள் பல்வேறு பிரச்சினைகளின் ஆரம்பமாக அமையக் கூடும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: