சூரியனை பார்க்க வேண்டாம்- எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

sunநமது சாதாரண கண்களினால் சூரியனைப் பார்த்தாலே சில நிமிடங்களுக்கு கண்ணே இருட்டாகிவிடும்.

இது தொடர்பாக விஞ்ஞானிகள் ஏற்கனவே தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.

அதேபோன்று சூரிய கிரகண நாட்களிலும் வெறும் கண்களினால் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்றே எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் தொலைநோக்கியின் ஊடாக சூரியைனைப் பார்ப்பது எல்லாவற்றினையும் விட பேராபத்து என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

இதற்காக பன்றியின் கண் ஒன்றினை தெரிவு செய்து தொலைநோக்கியின் ஊடாக சூரியனை நோக்கி வைக்கின்றனர்.

அவ்வாறு செய்து சிறிது நேரத்திலேயே அக் கண் எரிந்து பொசுங்குகின்றது. பூமியிலிருந்து சுமார் 150 மில்லியன் கிலோ மீற்றர்கள் அப்பால் சூரியன் இருந்த போதிலும் அதிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களே (Ultraviolet – UV) கண்ணை அதிகம் பாதிக்கின்றன என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

-http://news.lankasri.com

https://youtu.be/R9cMXCemoJI