வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சமஸ்டி தீர்வு தொடர்பான அரசியல் அமைப்புயோசனை தொடர்பில் நாட்டின் தலைவர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்று ஜாதிக ஹெலஉறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்தக் குற்றச்சாட்டை இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது சுமத்தினார்.
இது வருந்ததக்க சூழ்நிலை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் வடக்குமாகாண சபையின் தீர்மானத்துக்கு எதிராக மேல் மாகாணசபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
எனினும் ஏனைய மாகாண சபைகள் எவையும் தமக்கு முதுகெலும்பு இருப்பதை காட்டவில்லை என்று தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ் மக்களுக்கு விசேடமாக பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே தெற்கில் உள்ள மக்களும் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின்தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, நாட்டை பிரிக்க முனைவதால் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு துரோகி என்று வர்ணித்தார்.
-http://www.tamilwin.com


























உருமையாவது, எருமையாவது எடுரா ak47 னை!