சரவாக்கில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை சரவாக் தீ அணைப்பு, மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
“ஆம். இன்று நண்பகல் 12 மணிக்கு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது”, என அத்துறையின் உதவி இயக்குனர்(நடவடிக்கை) பர்ஹான் சுப்யான் பொர்ஹான் கூறினார்.
அச்சடலம், காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் கிடந்ததாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அச்சடலம் யாருடையது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
BN அரசியல்வாதிகள் அழியணும் அதுவும் நல்லாகவே நடக்கிறது
சரவாக் BN னுக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்றவர்களுக்கு ஓர் வேண்டுகோள். சரவாக்கில் தேர்தல் பரப்புரைகள் முடிந்ததும் , கோல லம்பூருக்கு திரும்பும்போது , கண்டிப்பாக நஜிப் ஏறி வரும் ஹெலிகாப்டரில் வந்துவிடுங்கள். இடம் இல்லாவிட்டால் போர்ட் கிள்ளானுக்கு வரும் தண்ணீர் கப்பலில் வந்துவிடுங்கள். உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.