ஈழத் தமிழர்களிடம் கருணாநிதி கொடுத்த வாக்குமூலம் என்ன? நீதி கேட்கிறார் கவிஞர் புலமைப்பித்தன்!

mullivaikkal-300x173இது ஒரு முக்கியமான கால கட்டம். கறையான் போல என் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கிற துன்பங்களையும் துயரங்களையும் உங்கள் கருணைமிக்க நெஞ்சங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இக் கால கட்டத்தில் நீங்கள்நல்ல தீர்ப்பு கூறுங்கள். நீதி வழங்குங்கள் என்று வேண்டிக்கொண்டு கவிஞ்சர் புலமைப் பித்தன் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

2007ம் ஆண்டில் இருந்து 2009 மே மாதம் முடிய நடத்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலைக்கு யார் ய் ஆரெல்லாம் காரணம்? யார் யாரெல்லாம் பொறுப்பு என்பதை ஆதாரத்தோடு உங்கள் முன் பணிந்து வைக்கிறேன்.

என்.டி.டி யின் தலைமை நிர்பர் லித்தின் கோகலே அவர்கள் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகத்தின் பெயர் “Srilanka From War to Peace” என்பதாகும்.

அவர், அந்தப் புத்தகத்தில் இண்டியன் கனெக்‌ஷன் என்று ஒரு அத்தியாயத்தை எழுதி இருக்கிறார். அந்த அத்தியாயத்தின் துணைத் தலைப்பாக “India’s Hidden Hand” என்றும் எழுதியிருக்கிறார்.

soniaஇந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனை, மகிந்த ராஜபக்சஹவின் சகோதரர்கள் சந்தித்தபோது, எம்.கே.நாராயணன் என்ன சொன்னார்? அதன் பின்னர் நடந்தது என்ன”? என்பதை நான் வேதனையோடு வெளிப்படுத்துகின்றேன்.

இந்தியா உங்களுக்கு உதவுவது எந்த காரணத்தைக் கொண்டும் வெளியில் தெரியக்கூடாது. முழுக்க முழுக்க ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் திமுகவின் ஆதரவில் மத்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது என்று எச்சரிக்கையாக சொல்லிவிட்டு முதன்முதலாக 5 ஹெலிகொப்டர்களை இலங்கைக்கு இந்தியாவை வழங்கச் செய்கிறார்.

karuna_001அதுவும் ஒரு நிபந்தனையோடு… என்ன நிபந்தனை? இந்திய வான்படையிலிருந்து அனுப்பப்படுகிற ஹெலிகொப்டர்களின் வண்ணத்தை மாற்றி இலங்கை வான்படையின் வண்ணத்தை இட்டுக்கொள்ள வேண்டும். அத்தோடு இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல்களை அனுப்புகிறார்கள். அதற்கு என்ன நிபந்தனை? இந்திய போர்க்கப்பல்களுக்கு உள்ள பெயரை மாற்றி சிங்களப் பெயர்களைச் சூட்டிக்கொண்டார்கள்.

இந்திய ராடார் உதவிகளுடன் சர்வதேச கடல் எல்லையில் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கொள்முதல் செய்துகொண்டு வரப்பட்ட 8 கப்பல்களையும் கடலில் மூழ்கடித்தார்கள்.

இந்தியாதான் யுத்தத்தை முன்னின்று நடத்தியது என்பதை நான் வெறுமனே சொல்லவில்லை. அதற்கு ஆதார நிகழ்வுகள் இருக்கிறது.

2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் திகதி இந்தியாவின் இராணுவத் தளபதி வி.கே.சிங் அவர்கள், மஹிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பின்பேரின் ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணமாக கொழும்புக்கு சென்றிருந்தார்.

அங்கே மஹிந்த ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து அதில் வி.கே.சிங் அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி “யுத்த சேனா” என்கிற விருதையும் வழங்கினார்.

விருது வழங்கிவிட்டு மகிந்த ராஜபக்‌ஷ உரையாற்றுகின்றபோது,

இந்த யுத்த சேனா விருதை நான் இந்தியாவின் ராணுவத் தளபதியான வி.கே.சிங் அவர்களுக்கு வழங்கக் காரணம், 4வது ஈழப் போரில் இறுதி வெற்றிக்கு காரணமானவர் இவர்தான். அதற்காக யுத்த சேனா விருது வழங்கிக் கெளரவிக்கிறேன்

என்று பாராட்டுரை வழங்கினார்.

இந்த இனப்படுகொலைக்கு காரணம் இந்தியா என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இப்படி மோசமான இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருந்தவேளையில், இங்கே தமிழ்நாட்டில் எந்த ஆட்சி நடந்தது? ஏன் அன்றைய ஆட்சி போரை நிறுத்துவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் பதவி விலகி வந்திருந்தால், தமிழ் இனப் படுகொலை செய்கிற காங்கிரஸின் மத்திய அரசுக்கு, தன் கட்சியின் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டிருந்தால் 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தோடூ மத்திய அரசூ கவிழ்ந்து போயிருக்கும்.

அது நடத்தி வந்த யுத்தம் நின்று போயிருக்கும்.

ஒரு காபந்து அரசால், இலங்கையின் யுத்தத்தை நடத்த முடிந்திருக்காது.

அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ் இனத்தை சூறையாடுகின்ற மத்திய அரசை ஏன் தொடர்ந்து தாங்கிப் பிடித்தார்? மத்திய அரசு கவிழாமல் பார்த்துக்கொண்டார்.

மத்திய அரசு கவிழ்ந்ர்கால், காங்கிரஸின் ஆதரவில் நடந்து கொண்டிருந்த திமுக மைனாரிட்டி ஆட்சி கவிழ்ந்து போயிருக்கும். தன்னுடைய ஆட்சி கவிழாமல் பார்த்துக் கொள்ள முதலமைச்சர் பதவியை விட்டுவிட முடியாமல், பதவி வெறியோடு எத்தனை லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றால் எனக்கென்ன? என்று வேடிக்கை பார்த்தார்.

தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தார். கருணாநிதி மட்டும் உண்மையான தமிழ் உணர்வு கொண்டவராக இருந்திருந்தால் ஏன் தமிழராகவே இருந்திருந்தால், ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களின் உயிர்கள் பறிபோயிருக்குமா? பதவிக்காகவும் பணத்துக்காகவும் ஓர் இனத்தையே அழிப்பதற்கு துணை போனார். துரோகம் செய்தார்.

இலங்கையில் உச்சக்கட்ட போர் தொடங்கிய கொஞ்ச காலத்துக்கு முன்னாலேயே கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்திக்க தன் தோழர்கள் 5 பேருடன் சம்பந்தன் அவர்கள் வந்திருந்தார். தோழர் சம்பந்தனிடம் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா…?

இந்தியா ஒரு மிகப் பெரிய தேசம். அது பெரிய தலைவரை இழந்திருக்கிறது. அந்த தலைவரின் குடும்பம் ஆட்சியில் இருக்கிறது. அவர்களின் உணர்ச்சிக்கு நாம் குறுக்கே நிற்க முடியாது.

அவரது வாக்குமூலத்துக்கு என்ன பொருள்?

இந்தியா மிகப் பெரிய தேசம். அதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அந்த குடும்பம் ஒரு தலைவரை இழந்திருக்கிறது. அதனால் கொலை வெறிகொண்டு ஈழத்தில் தமிழினப் படுகொலை செய்திருக்கிறது. அவர்களின் உணர்ச்சிக்கு நான் குறுக்கே நிற்க முடியாது.

அப்படியானால் கொலை செய்தது ராஜீவ் காந்தியின் குடும்பம் தான். என்னால் அதை தடுக்க முடியவில்லை. இதை எப்படி அவரால் வெட்கம் இல்லாமல் சொல்ல முடிந்தது?

தன் கணவரை சோனியா காந்தி இழந்ததற்காக நம் தமிழ்க்குல பெண்கள் 90000பேர் தாலி இழந்து தனி மரங்களாக இன்று தவிக்கிறார்களே.. இதுதான் நீதியா? இதுதான் காந்தி தேசத்தின் தர்மமா?

இப்போது தமிழ்நாடு தேர்தல் களத்தில் தமிழ் இன விரோத கட்சியான அதே காங்கிரஸும் தமிழ் இன துரோகக் கட்சியான திமுகவும் கை கோர்த்துக்கொண்டு தேர்தல் களத்தில் நிற்கிறார்களே.

ஈழத் தமிழினத்தை கொன்றொழித்து நாசப்படுத்திய ஈழ மண் முழுக்க ரத்த ஆறு ஓடச் செய்த இந்தக் கூட்டணிக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்?

ஐ.நா.மன்றத்தில் கிடைக்காத நீதி தமிழ்நாட்டு மக்கள் மன்றத்திலாவது கிடைக்குமா?

நான் உங்கள் அனைவரின் பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறேன். அருள்கூர்ந்து நல்ல தீர்ப்பு கூறுங்கள். நீதி வழங்குங்கள். நான் இரண்டு கையேந்தி நின்று பிச்சை கேட்பதைப் போல நீதி கேட்கிறேன்.

வழங்குவீர்களா…? வழங்குவீர்களா….?

தமிழின விரோதமும் தமிழின துரோகமும் முடியட்டும். தமிழினத்துக்காக நல்ல பொழுது விடியட்டும்.

-http://www.tamilwin.com

TAGS: