ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இரண்டாவது சடலம் கண்டெடுக்கப்பட்டது

heliசரவாக்கில்  செபுயாவ்,  சுங்கை  பத்தாங்  லுபார்  பகுதியில்  ஹெலிகாப்டர்   விபத்துக்குள்ளான  பகுதியில்  மேலும் ஒரு  சடலம்  கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அப்பகுதியில்  தேடல்,  மீட்பு  நடவடிக்கையில்  ஈடுபட்டிருப்போர்  இன்று  காலை  மணி  8.31-க்கு  அச்சடலத்தைக்  கண்டெடுத்தனர்.

நேற்று,  அந்த  ஹெலிகாப்டரில்  பயணம்  செய்த  அறுவரில் ஒருவரான  தோட்டத்தொழில்,  மூலப்பொருள்  துணை  அமைச்சர்  நோரியா  கஸ்னோனின்  உடல்  கிடைத்தது.

நோரியா  நேற்றிரவு  சிலாங்கூர்,  சுங்கை  புசார், சுங்கை  பூரோங்கில் அடக்கம்  செய்யப்பட்டார்.

இப்போது இரண்டாவது  சடலம்  கிடைத்திருப்பதால்  மேலும்  நால்வரைத்  தேடல்,  மீட்புக்  குழிவினர்  தேடுகிறார்கள்.