சரவாக், சுங்கை பத்தாங் லுபார் பகுதியில் தேடல், மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் முதலைகளிடம் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அப்பகுதியில் இதுவரை முதலை எதுவும் தென்படவில்லை.
லிங்காவுக்கும் பூலாவ் செடுகுவுக்குமிடைப்பட்ட ஆற்றின் பகுதி முதலைகள் நிரம்பிய பகுதியாகும் என சரவாக் போலீஸ் துணை ஆணையர் அப்துல் அசீஸ் யூசுப் கூறினார்.
பூலாவ் செடுகு சரவாக்கில் முதலைகளின் சரணாலயம். மலுடும் தேசியப் பூங்காவுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலங்களிலும் முதலைகள் நிறைய உண்டு.
தேடல், மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரிடம் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் ஆயுதங்கள் இருப்பதாகவும் அப்துல் அசீஸ் கூறினார்.
தேடுதல் பிரச்சினை வெகு சுலபமாக தீர்ந்துவிடும். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் உள்ள ஒரு சிலர், தேடியும் கிடைக்கவில்லை என்றால், முதலைகள் வாயில் சிக்கிக் கொண்டிருக்கலாம், என பிரதமர் அறிக்கை விட வசதியாக இருக்கும்.. அதனால்தானோ என்னவோ, இவ்வேளையில் முதலைகளை ஞாபகப் படுத்துகிறார்கள்.
முதலைகள் யார் BN தானே ? அவனுங்கதான் நாட்டிலே பயங்கர முதலைகள்