எப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்? வட கொரியா அதிபர் விளக்கம்

north_south_001வடகொரியா தொடர்ந்து 5-வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயார் ஆகி வருவதாக செயற்கைக்கோள் படம் ஒன்றை மேற்கோள்காட்டி அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வு கல்லூரியின்‘தி 38 நார்த் வெப்சைட்’, வெளியிட்டுள்ளஅறிக்கையில், “வடகொரியாவில் அணுகுண்டு சோதனை நடத்துகிற இடத்தில்அத்தகைய சோதனை நடக்கிறபோது மட்டுமே காணப்படுகிற வாகன போக்குவரத்து நடைபெறுவதை காட்டும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.

இது அடிக்கடி காணமுடியாத காட்சி. தற்போது நடைபெற்று வருகிற ஆளுங்கட்சி மாநாட்டின் இடையே கூட அணுகுண்டு சோதனை நடைபெறலாம்.

5 ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ள புங்க்யேரி சோதனை தளத்தின் படங்கள், வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தப்போவதை காட்டுகிறதுஎன கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எங்கள் நாட்டு இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேர்ந்தால்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று அந்நாட்டு மக்களிடையே உரையாற்றியஅவர், அணு ஆயுதங்களை கைவசம் வைத்துள்ள, பொறுப்புகள் மிகுந்த நாடு என்ற வகையில், எங்கள் நாட்டின்மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தி மூர்க்கத்தனமாக பிறநாடுகள் தாக்குதல் நடத்த வந்தால், அதன்மூலம் எங்கள் நாட்டு இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேர்ந்தாலன்றி, நாங்களாக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என கூறியுள்ளார்.

மேலும், அணு ஆயுத குறைப்பு தொடர்பான சர்வதேச நிர்பந்தங்கள் விவகாரம் தொடர்பாக நேர்மையான வகையில் ஒத்துழைப்பு வழங்கவும் உலகளாவிய அளவில் அணு ஆயுதபரவலை அமல்படுத்தவும் வட கொரியா தயாராகஇருப்பதாகவும் கிம் ஜாங் உன்கூறியுள்ளார்.

-http://news.lankasri.com