ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, சிரிய அகதிகளுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் பவுண்ட் உதவி நிதியை திருடியுள்ளதாக பிரித்தானிய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பணக்கார பயங்கரவாத அமைப்பாக உள்ளது. இதன் ஆண்டு வருமானம் 2.9 பில்லியன் டொலருக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்களில் இருந்தும் அதிக தொகை கிடைக்கிறது.
இந்த நிலையில் தற்போது கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பாலிஸ்தீனத்தில் இருந்து வந்து சிரியாவில் அகதிகளாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் உதவி நிதியை குறிவைக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச அபிவிருத்தி அமைப்பு (Department ofInternational Development) வெளியிட்டுள்ள அறிக்கையில், அகதிகளுக்கு செய்யப்படும் மனிதாபிமான உதவிகள் தற்போது வேறுவிதமான பிரச்சனையை சந்தித்துள்ளன.
அவர்களின் உதவுகளுக்கு வழங்கப்படும் பெரிய தொகை தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பாலிஸ்தீனத்தில் இருந்து வந்து சிரியாவில்அகதிகளாக உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்த உதவித்தொகையில் ஒரு சதவீதம் தான் அவர்களுக்கு சென்று சேர்கிறது. அதாவது 510 மில்லியன் பவுண்ட்டில் 5.1 மில்லியன் பவுண்ட் மட்டுமே அவர்களுக்கு சேர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-http://news.lankasri.com