சரவாக்கில் எதிரணித் தலைவராக யாரை நியமிப்பது என்பதுமீது சரவாக் டிஏபி விரைவில் கூடிப் பேசும் என சரவாக் டிஏபி தலைவர் சொங் சியாங் ஜென் தெரிவித்துள்ளார்.
சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியானை எதிரணித் தலைவராக நியமிக்கலாம் என பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மொழிந்திருப்பது குறித்து சொங் கருத்துரைத்தார்.
“அது பற்றி விவாதிப்போம். பதவிக்காக அடித்துக் கொள்வது நன்றாய் இராது”, என்றாரவர்.
‘பதவிக்காக அடித்துக் கொள்வது நன்றாய் இராது’ என தேர்தல் முடிந்ததும் யோக்கினை போல பேசி மக்களை முட்டாளாக்கும் கயவர்களே! தேர்தலுக்கு முன்பாக இது உங்களது மண்டைக்கு எட்டவில்லையா? பதவி வெறி பிடித்து அலைந்ததினால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஒரே தொகுதியில் இரண்டு கட்சிக் காரர்களும் மோதிக் கொண்டீர்களே. மக்களாகிய எங்களை ‘அருமையான மடையர்கள்’ என நினைத்துவிட்டீர்கள்.