உயர் இரத்த அழுத்தம் காரணமாக அன்வார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

 

Anwartohospitalபிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவரது வழக்குரைஞர் ஆர். சிவராசா கூறினார்.

அன்வாரின் இரத்த அழுத்தம் நிலையாக இல்லாதிருந்தது என்று சிவராசா மேலும் கூறினார்.

அவருக்காக பிராத்தனை செய்வோம் என்று சிவராசா அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

அன்வார் தற்போது சுங்கை பூலோ சிறையில் ஐந்தாண்டு சிறை தண்டனையை கழித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக, அன்வாரின் குடும்பத்தினர் அன்வாருக்கு போதுமான வைத்திய கவனிப்பு அளிக்கப்படவில்லை என்று கூறியிருந்தனர்.

சுகாதார அமைச்ச இதனை மறுத்ததோடு அவரை தனித்துறை நிபுணர் குழுவினரால் கண்காணித்து சிகிட்சை அளிக்கிறது என்று கூறியுள்ளது.

உள்துறை அமைச்சும் அன்வாருக்கு அனைத்து வசதிகளும், சுடுநீர் தூம்பு தாரைக் குளிப்பு மற்றும் மெத்தை போன்றவை உட்பட, அளிக்கப்படுவதாகக் கூறிற்று.