‘மகாதிர்ஸ்மே’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் இளம் சமூக ஆர்வலர் குழுவொன்று, குடிமக்கள் பிரகடனத்துக்கு ஆதரவாக 10ஆயிரம் கையெழுத்துகளை இன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் ஒப்படைத்தது.
அவர்களுடன் சென்ற சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பக்கார் யாஹயா, அந்த இளைஞர்கள் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து திரட்டும் வேலையைச் செய்யவில்லை என்றும் மக்களின் நலனுக்காக நாட்டின் நலனுக்காக அவர்கள் அப்பணியில் ஈடுபட்டனர் என்றும் சொன்னார்.
மகாதிர்மீதுள்ள அபிமானத்துக்காக கடைகளுக்கும் இரவுநேரச் சந்தைகளுக்கும் பேரங்காடிக் கடைகளுக்கும் விழாக்களுக்கும் சென்று அவர்கள் கையெழுத்துகளைத் திரட்டினார்கள் என்றாரவர்.
mamakthir is mehhhhh!!!
இதுநாள் நாட்டில் மாற்றம் வந்துவிடுமா? பகல் கனவு …மக்கள் என்றும் போராட்டம் தான்,திண்டாட்டம் தான்.