சிஎம்-மின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் டிஏபி தே-இன் முயற்சி நிராகரிக்கப்பட்டது

tehமுதலமைச்சரின்  பதவிக்காலத்தைக்  கட்டுப்படுத்தக்  கோரி  டிஏபி  தஞ்சோங்  பூங்கா  சட்டமன்ற உறுப்பினர்  தே  ஈ சியு  கொண்டுவந்த  தீர்மானத்தை  பினாங்கு  சட்டமன்றத்  தலைவர்  லாவ்  சூ  கியாங்  நிராகரித்தார்.

தீர்மானம்  நிராகரிக்கப்பட்டதற்கான  காரணம்  தமக்குத்  தெரிவிக்கப்படவில்லை   என  தே  கூறினார்.

“என்  தீர்மானத்தை  நிராகாரிக்கும்  உரிமை  அவைத்  தலைவருக்கு  உண்டு. ஆனால்,  நான்  தீர்மானம்  கொண்டுவர  எல்லா  விதிமுறைகளையும்  சரிவர  பின்பற்றியுள்ளேன்”, என்றார்.

நிராகரிப்பால்  மனம்  தளராத  அவர்,  இன்னும்  ஆறு  மாதங்களில்  தொடங்கும்  சட்டமன்றத்தின்  அடுத்த  கூட்டத்தொடரின்போது  தீர்மானத்தை  மறுபடியும்  தாக்கல்  செய்யப்போவதாகக்  கூறினார்.