கச்சதீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க முன்திட்டமாக தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரிடம் மத்திய அரசு அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது.
கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்களின் வலைகளை உலர்த்த, அங்கு நடக்கும் அந்தோனியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
காலப்போக்கில் தமிழக மீனவர்களை கச்சதீவு பக்கம் வரவிடாமல் தடுத்து வருகிறது இலங்கை கடற்படை.
இந்நிலையில் கச்சதீவில் ரூ.1 கோடி செலவில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட திங்கட்கிழமை அடிக்கல் நாட்டியுள்ளது இலங்கை.
இலங்கை வடக்கு மாகாண கடற்படை தளபதி பியல் டி சில்வா தேவாலயத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த விழாவில் கடற்படை அதிகாரிகள், பிஷப்புகள் கலந்து கொண்டனர்.
கச்சதீவை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கடற்படை முகாம் அமைக்கவே முதல்கட்டமாக தேவாலயத்தை இலங்கை கட்டுவதாக கூறப்படுகிறது.
இந்திய மத்திய அரசுக்கு தெரியாமல் தேவாலயம் கட்டுவது குறித்து தேசிய மீனவர் பேரவை அமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பில் உள்ள இந்திய தூதருக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-http://www.tamilwin.com
இந்தியாவின் முட்டாள்தனதிற்கு இது ஒரு சாட்சி.
இலங்கை மட்டுமா ?..சீனா கூட அங்கு உள்ளது ..ஈழ மக்களை படுகொலை செய்த ..பிச்சைக்கார ..இந்தியாவிற்கு சீன ஆப்பு வைக்கும் போது ஈழ மக்கள் தங்கள் பங்கை செய்வார்கள்
இந்தியாவின் மடத்தனத்திர்க்கு அளவே இல்லை– பேசி மாளாது.
என் பாட்டன் மண்ணில் அந்நியன் கடற்படை? இந்தியாவால் ஒரு மயிராய் கூட புடுங்க முடியவில்லை! நல்லவ வயிற்றிலிருந்து பிறந்திருந்தால் சூடு சொரணை இருக்கும்!!!
ஏன் இந்தியா தமிழ் நாட்டின் கச்சா தீவை சிங்களவனிடம் கொடுத்தது.உலகத்தில் எந்த நாடும் தன் மக்களுக்கு இந்த துரோகத்தை செய்யாது,தமிழ் நாட்டு மக்களின் அனுமதி இல்லாமல் செய்த இந்த அயோக்கியத்தை இந்திர காந்தியும் கொலைகார கருணாநிதி மன்னிக்க முடியுமா?ஏமாளிகள் தமிழ் நாட்டு மக்கள்.
இந்தியா ஒன்றும் முட்டாள் அல்ல . தெரிந்தேதான் செய்கிறது.பாகிஸ்தான் பங்களாதேஸ் போரில் தைரியாமாக படைகளை பங்களாதேசுக்கு அனுப்பி சுதந்திரம் வாங்கி கொடுத்ததே எப்படி? அங்கே இருப்பவர்கள் வடநாட்டுக்காரன். இனம் இனத்தோடு சேர்ந்துடுச்சி. இந்தியாவுக்கு எப்போதும் தமிழ் நாட்டை பற்றி கவலை இல்லை. சிறிலங்காவை பக்கத்தில் வைத்துகொண்டு தமிழ் நாட்டை மிரட்டிக்கொண்டுயிருக்கு. வடநாட்டுகாரனக்கு எப்போது எங்கே ஈழ நாட்டோடு தமிழ்நாடு பிரிந்து போய்டும்னு பயம். அதான் ஈழ நாட்டுக்கு ஆப்பு வச்சான், தமிழ் நாட்டுக்கும் ஆப்பு வைக்குறான் ..
தமிழகத்தில் ஏதும் அரசியல் மாற்றம் ஏற்படுமோ என்னும் அச்சத்தில் தான் இலங்கை கடற்படை முகாம் அமைக்க முயற்சி செய்கிறது. மாற்றம் இல்லை என்றால் முயற்சியை கை விட்டுவிடும். பார்ப்போம்! இன்னும் ஒரு வாரம் தானே!
ஐயா சின்னப்பையன் அவர்களே நீங்கள் சொல்வது உண்மையே– வடக்கத்தியங்களுக்கு மதராசிகள் பற்றி அக்கறை கிடையாது– நாம் ஒரு பொருட்டே இல்லை. இது சுதந்திரத்திற்கு தமிழ் நாட்டில் இருந்து வடக்கதியன்களுக்கு இங்கு அம்னோவுக்கு நம்மவர்கள் கொடுத்த ஆதரவு போல் தான்– வெளி நாட்டில் இருக்கும் வடக்கத்தியன்கள் நாம் இந்திய/தமிழ் நாட்டை பூர்வீகம் கொண்டவர்கள் என்றே ஏற்பதில்லை. ஆனால் சுரண்ட மட்டும் தெரியும். இது யாருடைய தவறு– நம் இனத்திற்கு முன் யோசனை வருங்காலத்தை பற்றிய அறிவு மிக குறைவு.