பென்டகன் இருத்தரப்பு நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளது- சீனா

Chineseintru_fig1_b

சீன இராணுவம் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையானது இருத்தரப்பு நம்பிக்கை சேதப்படுத்தியுள்ளதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2016–ம் ஆண்டுக்கான சீனாவின் இராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகனில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பாதுகாப்பு உதவி ராஜாங்க செயலாளர் ஆபிரகாம் டென்மார்க் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்திய எல்லை அருகில் சீனா தனது படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இது குறித்து எமக்கு தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதன் உண்மையான நோக்கம் என்ன என்ற முடிவுக்கு வருவது கடினமானது என்றார்.

அமெரிக்க பாதுகாப்பு ராஜாங்க செயலாளர் ஆஷ்டன் கார்ட்டரின் இந்திய பயணம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த உதவி ராஜாங்க செயலாளர், இந்திய பணம் நல்ல பலனை அளித்துள்ளது.

இந்தியாவுடன் நாம் இரு தரப்பு உறவை மேம்படுத்தப்போகிறோம். சீனாவை முன்னிட்டு அல்ல. இந்தியா ஒரு முக்கியமான நாடு என்பதின் அடிப்படையில்தான்.

இந்தியா மீதான மதிப்பீட்டை புரிந்துகொண்டவர்களாக அந்த நாட்டுடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது தளங்களில், அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனா படையினரை குவித்துள்ளதாக கூறி, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனா, தென்சீன கடலில் உருவாக்கி உள்ள சர்ச்சைக்குரிய செயற்கை தீவில் இந்த ஆண்டு கணிசமான இராணுவ உட்கட்டமைப்பு, தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை பலப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எவ்வாறாயினும் அமெரிக்காவின் அறிக்கை தொடர்பில் சீன தனது கடும் கண்டத்தை வெளியிட்டுள்ளது.

பென்டகனின் அறிக்கைக்கு தன்னுடைய வலிமையான அதிருப்தியை தெரிவித்துள்ள சீனா, பென்டகன் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளது.

பென்டகன் அறிக்கையான இருத்தரப்பு நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டதாக சீனா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-http://news.lankasri.com