முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு இன்று!

mullivaikkal09விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினர் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் கடைசித் தறுவாயில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு இன்றாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருதரப்பான ஐக்கிய தேசியக் கட்சி தென்னிலங்கையின் போர் வெற்றி மனப்பாங்கிலிருந்து விடுபட்டு வெற்றிக் கொண்டாட்டங்களை தவிர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இழப்புகள் குறித்த வலியை மதிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

எனினும் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் போர் வெற்றிக் கொண்டாட்டங்களை இன்றும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனை முன்னிட்டு இன்று காலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபி முன்னிலையில் நடைபெறும் போர் வெற்றி நினைவு கூரும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட இராணுவத்தினரின் வீரத்தினை சித்தரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வொன்றும் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் குறித்த கலாசார நிகழ்வில் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: