GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு ஏரிக்குள் காரை ஓட்டிய பெண்!

carகனடாவின் ஒண்டாரியோ மகாணத்தில், பெயர் குறிப்பிட விரும்பாத இளம்பெண் ஒருவர் GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு காரை ஏரிக்குள் ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒண்டாரியோ தலைநகர் டொராண்டோவில், பெயர் குறிப்பிட விரும்பாத 23 வயதான இளம்பெண் ஒருவர், கடும் மூடுபனி பொழியும் இரவு நேரத்தில், தனது வழிகாட்டும் GPS மீது அதிகமாக நம்பிக்கை வைத்து காரை ஓட்டியுள்ளார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் எதிரே வரும் வாகனத்தை பார்க்க மிக கடினமாக இருந்துள்ளது.

எனவே, அவர் LittleTub Harbor அருகில் காரை நிறுத்த GPS கருவியை அணுகியுள்ளார். அவரால் எதிரில் இருப்பதை பார்க்க முடியாத நிலையில், GPS கூறியதை கேட்டுஅவரும் காரை ஓட்டியுள்ளார்.

இதன் விளைவாக காருடன் சேர்ந்து அவரும் Lake Huron ஏரியில் விழுந்துள்ளார்.

கார் முழுமையாக ஏரிக்குள் மூழ்குவதற்கு முன் குறித்த பெண் காரின் ஜன்னல் வழியே வெளியேறி நீந்தி கரைக்கு வந்துள்ளார்.

எனினும், குறித்த பெண்ணுக்கு காயங்கள் ஏதும் எற்படவில்லை என்றும், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிசார் தகவல் தெரிவித்து்ளளனர்.

-http://news.lankasri.com