சர்வதேச அளவில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அன்புடன் வரவேற்று ஏற்றுக்கொள்ளும் முதல் 10 நாடுகளின் பட்டியலை சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி வெளியிட்டுள்ளது.
உலகளவில் 27 நாடுகளை சேர்ந்த 27,000 நபர்களிடம் இது தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், சுமார் 80 சதவிகித மக்கள் ‘ஆதரவற்ற நிலையில் புகலிடம் கோரி வரும் அகதிகளை ஏற்றுக்கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.
அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் அவர்களுக்கு கூடுதலான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என 70 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அகதிகளை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் முதல் 10 நாடுகள்:
- சீனா
- ஜேர்மனி
- பிரித்தானியா
- கனடா
- அவுஸ்திரேலியா
- ஸ்பெயின்
- கிரீஸ்
- ஜோர்டன்
- அமெரிக்கா
- தென் கொரியா
இதே பட்டியலில் அகதிகளை வரவேற்று ஏற்றுக்கொள்வதில் இந்தியா 12-வது இடத்திலும் பிரான்ஸ் 13-வது இடத்திலும் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் இந்தோனேஷியா மற்றும் ரஷ்யா நாடுகள் இடம்பெற்றுள்ளன.
யுத்தம் மற்றும் வழக்கு விசாரணைக்கு அஞ்சி புகலிடம் கோரி வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் 10 நாடுகளின் பட்டியல்:
- சீனா
- பிரித்தானியா
- கிரீஸ்
- ஸ்பெயின்
- அமெரிக்கா
- கனடா
- அவுஸ்திரேலியா
- பாகிஸ்தான்
- ஜேர்மனி
- நைஜீரியா
இதே பட்டியலில் பிரான்ஸ் 11-வது இடத்திலும் இந்தியா 18-வது இடத்திலும் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா இடம் பெற்றுள்ளன.
யுத்தம் மற்றும் வழக்கு விசாரணையிலிருந்து தப்பிக்க பிற நாடுகளில் புகலிடம் கோருவது சரியா? (சரி என்று கூறிய நாடுகள்):
- ஜேர்மனி
- ஸ்பெயின்
- கனடா
- அர்ஜெண்டினா
- அவுஸ்திரேலியா
- பிரித்தானியா
- சிலி
- கிரீஸ்
- பாகிஸ்தான்
- நைஜீரியா
இதே வரிசையில் பிரான்ஸ் 14, அமெரிக்கா 15, இந்தியா 21-வது இடங்களிலும் உள்ளன. கடைசி இடங்களில் துருக்கி மற்றும் தாய்லாந்து நாடுகள் இடம் பெற்றுள்ளன.
யுத்தம் மற்றும் வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்து வருபவர்களுக்கு எந்த நாடுகள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்?
- சீனா
- நைஜீரியா
- ஜோர்டன்
- ஸ்பெயின்
- பிரேசில்
- சிலி
- அர்ஜெண்டினா
- ஜேர்மனி
- கிரீஸ்
- தென் கொரியா
இதே வரிசையில் அவுஸ்திரேலியா 11, பிரித்தானியா 12, கனடா 16, அமெரிக்கா 18, பிரான்ஸ் 20 மற்றும் இந்தியா 25- இடங்களில் உள்ளன. இறுதி இடங்களில் தாய்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
-http://news.lankasri.com