கனேடிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபுத் திங்கள்! பிரேரணை சமர்ப்பிப்பு

parliament_canadaa‘கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோக பூர்வமாக பிரகடனம்செய்யக் கோரும் மனுவை, ஸ்காபரோ -றூஜ் றிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சமர்ப்பித்துள்ளார்.

இந்தப் பிரகடனமானது, நாடு பூராகவும் தமிழ் மக்கள் தமது செழுமைவாய்ந்த தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி மற்றும் வரலாற்றை சார்ந்து விழாக்களைக்கொண்டாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஆனந்த சங்கரியின் இந்த வரவேற்கத்தக்க நடவடிக்கையைப் பாராட்டி, கனடியத்தமிழர் பேரவை வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காக கனடியபாராளுமன்றத்தை வேண்டுகின்ற தீர்மானத்தை அறிமுகப்படுத்தியதற்காக ஸ்கர்பரோ ரூஜ்ரிவர் பார்க் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு நன்றிகளையும்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அக்கரை முதல் இக்கரை வரை உள்ளகனடியர்கள் எமது தமிழ் மரபுரிமை, கலாசாரம், மொழி, வரலாறு என்பவற்றைக்கொண்டாடுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ரொரொன்ரோ மாவட்ட பாடசாலைகள் அமைப்பு (TDSB), பல பாரிய ரொரொன்றோப் (GTA)பகுதி நகரசபைகள், ரொரொன்ரோ நகர், ஒன்ராரியோ மாகாணம் ஆகியன அனைத்தும் ஜனவரியைதமிழ் மரபுரிமை மாதமாக அறிவித்துள்ளன.

1950 களிலேயே தமிழர்கள் கனடாவுக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டார்கள். இது 1983தமிழர்களுக்கெதிரான படுகொலைகளின் பின்னர் வேகமடைந்தது.

அந்த நாட்களில் இங்குவந்த பின்னர் தமிழ்க் கனடியர்கள் பெரும் தடைகளைக் கடந்து கனடாவின்வளர்ச்சிக்கும் செழுமைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

தமிழ்க் கனடியர்களுக்கு ஜனவரி ஒரு முக்கிய மாதம். தமிழ் அறுவடை விழாவான தைப்பொங்கல் இந்த மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது.

ஜனவரி மாத்தத்தில் தமிழ் மரபுத் திங்களாக அறிவிப்பதன் மூலம் எமது சிறந்த தேசம்தமிழ் கனடியர்கள் கனடாவின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரத்துக்குஒரு சொத்தாக இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்கிறது.

தமிழ்க்கனடியர்கள் இந்த ஊக்கமளிக்கும் பாத்திரத்தை வகித்திருப்பதையும் இன்னும்கனடாவின் சமூகக் குழுக்களிடையே வகித்துக்கொண்டிருப்பதையும் நினைவுகூரவும்,கொண்டாடவும், எதிர்கால சந்ததியினருக்கு கற்பிக்கவும் ஒரு வாய்ப்பாக தமிழ்மரபுத் திங்கள்அமையும்.

எல்லா அரசியல் கட்சிகளையும் இந்த பிரேரணையை ஏகமனதாக அங்கேகரித்துஉத்தியோகபூர்வமாக ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவிக்க ஒன்றிணையுமாறுநாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

-http://www.tamilwin.com