பாக்தாத்தில் பிரதமர் அலுவலகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 4 பேர் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பாக்தாத்தில் பிரதமர் அலுவலகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

பாக்தாத் :

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பகுதி பசுமை பிரதேசம். அங்குதான் பாராளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்கு ஊழலுக்கு எதிரான போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை விரட்டியடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.

ரப்பர் தோட்டாக்களாலும் சுட்டனர்.போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 4 பேர் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மோதலில் 90 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாக்தாத்தில் சிறிது நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களில் ஷியா பிரிவு மத தலைவர் மோக்ததா அல் சதார் ஆதரவாளர்களும் அடங்குவார்கள். இவர்கள் கடந்த சில காலமாக ஊழலுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.maalaimalar.com