ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள ஓடியோ ஒன்றில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரை மணி நேரம் கொண்ட இந்த புது ஓடியோவில் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளரான அபு முகமது அல் அத்னானி என்பவர் பேசுகின்றார்.
தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் இந்த ஓடியோவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளை குறிவைத்து தாக்குதல்களை தொடர் வேண்டும் என்றுள்ளார்.
வரும் ஜூன் மாதம் முதல் இந்த தாக்குதல்களை தொடர வேண்டும் என கூறும் அபு முகமது, அது மிகுந்த திட்டமிடலுடனும் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் கட்டவிழ்த்திருக்கும் தாக்குதல்களை விடவும் நிலையானதுமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் குழுக்களின் ஒழுங்கீனமே சமீபத்திய தோல்விகளுக்கு முக்கிய காரணம் என கடிந்துள்ள அபு முகமது, குழுவினர் அனைவரும் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு போன்றே இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் தாக்குதலை முன்னெடுக்க கோரியுள்ள அபு முகமது, புனித மாதத்தில் வீரமரணமடைய குழுக்கள் தயாராக வேண்டும் என்றார்.
ஈராக்கை பிறப்பிடமாக கொண்ட அபு முகமது ஐ.எஸ்.குழுவினரிடையே செல்வாக்கு மிகுந்தவர். ஐ.எஸ் குழுவினரிடையே தொடர்ந்து எழுச்சி உரையாற்றி பல ஓடியோக்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஐ.எஸ் அமைப்பின் தலைவராக இருக்கும் அபு அல் பாகதாதி தமது பதவியை இழந்தால் அந்த பதவிக்கு அபு முகமது அத்னானி வரக்கூடும் என கூறப்படுகிறது.
-http://news.lankasri.com