வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலத்தில் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தும் நிலை வந்திருக்க வாய்ப்பில்லை.
சம்பந்தன், விக்னேஸ்வரன் காலத்திலாவது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழர்கள் மீ ண்டும் போராடும் நிலை உருவாகும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூ றியுள்ளார்.
வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகள் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப் பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் உலகத்தில் இல்லாத ஒன்றை கேட்கவில்லை. பல நாடுகளில் நடைமுறையில் உள்ளதையே நாம் கேட்கிறோம். அதனை இ னவாதமாக பார்க்க நினைக்கிறார்கள்.
சமஷ்டி கோட்பாட்டை முதலி ல் கேட்டவர்கள் சிங்களவர்களே இந்த விடயத்தில் அரசாங்கம் நல்ல முடிவை காணவேண்டும்.
வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். காணப்படவில்லை, அதனாலேயே வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் தாங்க வேண்டிய நிலை உருவானது.
எனவே தமி ழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் காலத்தில் எமக்கான தீர்வு கிடைக்க வேண்டும் இல்லையேல் தமிழ் மக்கள் மீண்டும் போராட வேண்டிய நிலை உருவாகும்.
இன்றைக்கு இல்லை என்பதற்காக எப்போதும் இல்லை என்பதாக அர்த்தம் இல்லை என்றார்.
-http://www.tamilwin.com
……………………………..பிரச்சனைகளை பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமாக தீர்க்க முயலுங்கள்.