பெட்ரோனாஸ் சொத்து விற்பனை தொடர்பில் ரஷ்யர்களுடன் பேச்சு நடத்தவில்லை

petதேசிய எண்ணெய்,  எரிவாயு  நிறுவனமான  பெட்ரோனாஸ்  அதன்  சொத்துகளை  விற்பது  பற்றி  ரஷ்யர்களுடன்  பேச்சு  நடத்திவருவதாகக்  கூறப்பட்டிருப்பதை  மறுக்கிறது.

இதன்  தொடர்பில்  பெட்ரோனாஸ்  மலேசியாகினிக்கு  இன்று  சுருக்கமான  அறிக்கை  ஒன்றை  அனுப்பியிருந்தது.

“பெட்ரோனாஸ்  அதன்  குறிபிட்ட  சொத்துகளையும்  பங்குரிமையையும்  விற்பதற்காக  பேச்சுகள்  நடத்தி  வருகிறது  என   ரஷ்யாவிலிருந்து  வரும்  செய்திகள்  குறித்து  கருத்துரைக்க விரும்புகிறது.

“அந்த  நோக்கத்தில்   ரஷ்யாவில்  எந்ததத்  தரப்புடனும்  பெட்ரோனாஸ்  பேச்சு  நடத்தியதில்லை,  நடத்திக்  கொண்டிருக்கவும்  இல்லை  என்பதைத்  தெளிவுபடுத்த  விரும்புகிறோம்”.

இவ்வாறு  அவ்வறிக்கை  கூறியது.