படை முகாமுக்குள் சம்பந்தன் சென்றதில் தவறென்ன உண்டு?

army-sambபயங்கரவாதத்தை ஒழிக்க படைவீர்ர்கள் பெரும் தியாகங்களைச் செய்தார்கள் அவர்களை நினைவு கூருவது அனைத்து மக்களினதும் கடமையாகும்.

வடக்கினதும் தெற்கினதும் உறவு பயங்கரவாதம் காரணமாக பாதிப்படைந்தது. அந்தத் தடையை உடைத்தெறிந்து வடக்கினையும் தெற்கினையும் இணைத்த தினத்தை கொண்டாடுவது அவசியமாகும்.

நாம் அங்கு பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் நோக்கம் என்னவென்பதை அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வடக்கு, தெற்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்படுத்தவே நாம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தோம். அதனால் தான் அதனை மனிதாபிமான நடவடிக்கையென பெயரிட்டோம்.

வடக்கில் நடந்த ஆயுதப் போராட்டமே பயங்கரவாதமாகும். கொலை, சொத்துக்களை அழித்தல் என்பது பயங்கரவாதத்தின் அங்கமாகும்.

வடக்கு, கிழக்கில் பலம் வாய்ந்த இராணுவ, விமான, கடற் பயங்கரவாத குழுக்கள் எவ்வாறு உருவானது?

அதற்கு வடக்கு, கிழக்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் இவ்வளவு பலம் பெற்றிருக்க முடியுமா?

அவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதன் காரணம் என்ன? அம் மக்கள் சரித்திரபூர்வமாக பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளார்கள்.

அவர்களின் பிரச்சினைகளுக்கு தெற்கு அரசாங்கம் சரியான தீர்வை வழங்காமையே இதற்குக் காரணமாகும்.

பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் நோக்கம். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதென பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் கூறுவது தங்களது எதிர்பார்ப்பை தங்களது எதிர்பார்ப்பு நிறைவேற்றமாட்டாது என அவர்கள் உணர்ந்தார்கள்.

அமிர்தலிங்கம் போன்றோர் கொலை செய்யப்பட்டதும் இறுக்கமான சூழ்நிலையிலேயாகும். அத்துடன் சிறுபான்மையினர் என்னும்எண்ணத்திலிருந்து அவர்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தெற்கின் பெரும்பான்மை சிங்கள அரசாங்கம் தவறிவிட்டது.

அதனால் தங்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் இயக்கத்துக்கு ஆதரவு அளித்ததையிட்டு அவர்களைக் குறை கூற முடியாது.

வடக்கு, கிழக்கில் உருவான பயங்கரவாதத்தால் இந்நாட்டு அனைத்து மக்களும் முப்பது வருடங்களாக இன்னல்களுக்கு உள்ளானார்கள். பயங்கரவாதத்தை ஒழித்து ஏழு வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. நாம் நினைவு கூரும் கொண்டாடும் சரித்திரப் புகழ் மிக்க தருணமாகும்.

நாம் இவ்வேளையில் கவனத்திற் கொள்ள வேண்டியது பயங்கரவாதத்தை ஒழித்ததன் நோக்கமான வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு எவ்வளவு பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதாகும்.

அரச மட்டத்தில் நடைபெறும் வீரர்கள் நினைவு கொண்டாட்டங்கள் ‘பயங்கரவாதத்தை ஒழித்தது என்பது தமிழ் மக்களின் தோல்வி’ என அவர்கள் எண்ணுமளவிற்கு அமையக் கூடாது. அதற்காக்க் கவர்ச்சியாக கொண்டாட்டங்களை நடத்துதல், இராணுவ ஆயுதங்களை கண்காட்சிப் படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

அதனால் வடக்கு கிழக்கு மக்களின் மனங்கள் புண்படக் கூடும்.அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரித்தது இது போன்ற எமது பொறுப்பில்லாத நடவடிக்கைகளினால் எனபதை நாம் உணர வேண்டும்.

யுத்தத்தை ஒழித்தது மனிதாபிமான நடவடிக்கை என பெயரிட்டால் அதன் பின் நடைபெறும் போருக்குப் பிந்திய முகாமைத்துவமும் மனிதாபிமான முறையிலேயே நடைபெற வேண்டுமல்லவா?

தனிமனிதனாக எந்தவொரு நிகழ்வையும் நாட்டினுள் கொண்டாடும் உரிமை உள்ளது. சிவாஜிலிங்கம் அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதியாவார். அவர் நினைவு விழாவைக் கொண்டாடியுள்ளார். குறித்தளவானோர் கலந்து கொண்ட நிகழ்வில் புலிகளைப் பற்றியோ, பிரபாகரனைப் பற்றியோ குறிப்பிட வேண்டாமென அரசு அவருக்கு அறிவித்து இருந்தது.

இலங்கையில் எத்தனையோ வீரர்களின் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது. மக்கள்விடுதலை முன்னணி இரண்டு வீரர்கள் தினத்தைக் கொண்டாடுகின்றது. அவர்கள் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டவர்கள். அவர்களாலும் இந்நாட்டுப் பிரஜைகள் கொல்லப்பட்டார்கள். பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்படி இருந்தும் மாவீரர் தினத்தைக் கொண்டாடுகின்றார்கள்.அரசு அதனைத் தடுப்பதில்லை.

ஆகவே வெற்றியின் மாவீரர் தினத்தைக் கொண்டாட எந்த அமைப்புக்கும் சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அரச நினைவு விழாக்களில் உயிர் நீத்த, அங்கவீனர்களான அனைவரையும் நினைவு கூர்ந்து கெளரவப்படுத்தவேண்டும். அதோடு மனிதாபிமான நடவடிக்கைகளின் முக்கிய அபிலாஷையாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருக்க வேண்டும்.

வீரர்கள் நினைவுதினத்தை அரசியல் வெற்றிக்காக பாவிக்கக் கூடாது.ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியெனக் கூறு​​​பவர்கள் மற்றும் ஏனைய அமைப்புகளோ அரசியல் நோக்கத்துக்காக வீரர்கள் மற்றும் மாவீரர் நினைவு விழாவை ஆயுதமாக பாவிப்பதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதனால் பெற்ற வெற்றி வடக்கு – தெற்கு நல்லிணக்கம் உருவாவதற்கு தடையாக அமையும்.

இலங்கை தற்போது யுத்த மனநிலையில் உள்ள நாடல்ல. அதனால் மிலிட்டரி கலாசாரம் தொடர்பான அறிக்கைகள் நாட்டில் கூடாது.

மனிதாபிமான நடவடிக்கைக் கால கண்காட்சிகள் இராணுவ வீரர்கள் எல்லா இடங்களிலும் ஆயுதம் ஏந்தி நிற்றல். இராணுவ பரிசோதனை போன்ற இராணுவ அடையாளங்கள் எமக்குத் தேவையில்லை. சந்திகள் தோறும் ஆயுதமேந்திய வீரர்கள் இனியும் அவசியமில்லை. அதனால் திரும்பத் திரும்ப தமிழ் மக்களின் மனிதில் எம்மைப் பற்றிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

ஆகவே பயமின்றி வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

வடக்கிலோ தெற்கிலோ அமைதியைச் சீர்குலைக்கும் செயல்கள் நடைபெறுவதில்லை. வடக்கின் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. தெற்கிலும் பயங்கரவாத செயல்கள் காணப்படவில்லை.

ஆகவே இராணுவமும், பொலிசும் மக்களின் நண்பர்களாக செயல்பட வேண்டும்.வெளிச் சக்திகளினால் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நாம் பலமானவர்களாக இருக்க வேண்டும். அதற்காக உலகம் அணு ஆயுதங்கங்களை பாவித்தால் நாமும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் இப்போதுள்ள சூழ்நிலையில் அதிகளவு பாதுகாப்பை எதிர்பார்க்கத் தேவையில்லை யாராவது விசேட பாதுகாப்பை எதிர்பார்த்தால் அவர்கள் எதற்காகவோ பயப்படுகின்றார்கள்.என்று அர்த்தமாகும்.

அவர்களால் மனித உயிர்களுக்கு ஊறு விளைவிக்கப்பட்டிருந்தால், பொது சொத்துக்களைக் கொள்ளையடித்திருந்தால், ஜனநாயக விரோதமாக நடந்திருந்தால், தங்கள் பிழையான செயல்களால் பாதிக்கப்பட்டவர்களால் பழிவாங்கும் சந்தர்ப்பம் உண்டென்றால், அவர்கள் தான் விசேட பாதுகாப்பை எதிர்பார்க்கின்றார்கள்.

ஜனநாயகமாக சமாதானத்துடன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு விசேட பாதுகாப்பு தேவையில்லை பொலிஸாரின் பாதுகாப்பே போதுமானது.

இலங்கையில் அரசு பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவொரு அரசியல்வாதிக்கும் அதைப் பற்றி அறிந்து கொள்ளவும். அது தொடர்பாக எழும் பிரச்சினைகளைப் பற்றி ஆராயவும் உரிமை உண்டு.

அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் வடக்கில் இராணுவ முகாமொன்றுக்குள் நுழைந்தது தொடர்பாக தெற்கு அரசியல் வாதிகள் பெரும் சர்ச்சையை எழுப்பினார்கள். அது ஒரு சாதாரண சம்பவமாகும்.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்ற பிரதிநிதிக்கோ அல்லது வேறு அரசியல் கட்சி அங்கத்தவருக்கோ உரிமையுண்டு.அது தெற்கில் எவ்வித தடையுமின்றி நடைபெறுகின்றது.

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அம்மக்களின் பிரச்சினைக்காக இராணுவ முகாமுக்கு செல்லும் உரிமை அப்பிரதேச பிரதிநிதிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

சம்பந்தனும் அவ்வாறான சாதாரண செயலையே செய்தார். ஆனால் அதை தெற்கு தீவிரவாத அரசியல் வாதிகள் சமாதானத்தை குலைக்கும் செயலென உருவாக்க முயற்சி செய்தார்கள்.

வடக்கிலோ தெற்கிலோ மக்கள் பிரதிநிதிக்கு இராணுவ முகாமுக்குள் செல்ல அனுமதியுண்டு. ஆனால் சம்பந்தன் முன்னறிவிப்பின்றி சென்றதே பெரிதாக்கப்படுகின்றது.

தெற்கு அரசியல்வாதிகள் பொலிஸ் நிலையங்களுக்கு தங்கள் ஆதரவாளர்களுக்காக அத்துமீறி நுழைந்த சம்பவங்களுண்டு.அப்போது அதனை யாரும் விமர்சிக்கவில்லை.

அரசியல் இலாபத்துக்காக இவ்வாறான சம்பவங்களை பெரிதாக விமர்சிப்பது அரசு மக்களிடையே ஏற்படுத்தும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே புத்திசாலியான மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இப்படியான சம்பவங்களை ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும்.

நல்லாட்சி அரசின் நோக்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே. அது தொடர்பாக அரசு நல்ல விளைவுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர போன்றோர் மிகச் சிறப்பான காரியமாற்றி உள்ளார்கள். அவர்கள் போருக்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துகின்றார்கள்.

கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டதாகவே இத்திட்டங்கள் உள்ளன.தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதித்தது இந்நாட்டின் நல்லிணக்கம் தொடர்பாகப் பெற்றுக் கொடுத்த முதல் சந்தர்ப்பமாகும். அப்போதைய சூழ்நிலையில் அவ்வாறான ஒரு முடிவை செயல்படுத்தியது மிகவும் சவாலான விடயமாகும்.

வடக்கு முதலமைச்சர் கடந்த காலத்தில் முக்கியமான விடயமொன்றைப் பற்றி கதைத்திருந்தார். அதை ஊடகங்கள் பிரசாரப்படுத்த்த் தவறிவிட்டன. அவர் நாகதீப விகாரைக்குச் சென்று தாமரை மலர்களால் புத்தர் சிலையை வழிபட்டார்.

அதன் பின்னர் அவர் பேசும் போது, தெற்கு அரசியலாளர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நாம் பத்து அடி முன்னால் எடுத்து வைப்போம்’ என்றார். இது நல்லிணக்கத்துக்கான மிகப் பெரிய கூற்றாகும்.

வடக்கு கிழக்கில் அரசியலில் இவ்வாறான ஒத்துழைப்பு கிடைக்கும் போது நீண்ட கால நல்லிணக்கத்துக்காக தென்னிலங்கையும் தன்னுடைய முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்த முன்வர வேண்டும்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல் வாதிகளுக்கு இருந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழர் ஒருவரான சம்பந்தருக்கு கொடுக்கப்பட்டது மிக முக்கிய நிகழ்வாகும்.

பாராளுமன்றத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆணைக்குழுக்களை அமைக்கும் அரசியலமைப்புச் சபையில் பிரதிநிதியாக செயல்பட சம்பந்தருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இது சிறந்த அரசியல் முன்னேற்றமாகும்.

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளன. இந்நாட்டுக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. சலுகை கிடைத்தது இப்படியான ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் காரணமாகவே.

ஐரோப்பிய சந்தைக்கு மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றின் பலனாகவே இவை எமக்கு சாத்தியமாகியுள்ளன.

அதனால் நாம் நீண்ட கால நன்மைகள் பெறக் கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சிவில் அமைப்புகளும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய சந்தர்ப்பம் உருவாக்கியுள்ளதை உணர வேண்டும்.

-http://www.tamilwin.com

TAGS: