உண்மையை கண்டறியும் ஆணைக்குழு விரைவில் – பிரதமர்

ranil_0போர் நடைபெற்ற சமயத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக தேடி அறிவதற்காக உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை சிலரை நேற்று அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் இது குறித்து விளக்கியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் இதில் கலந்து கொண்டார்.

உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தீர்க்க முடியாத வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்.

வெளிநாட்டு சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்ட போதிலும் அவர்கள் வழக்கு விசாரணைகளில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் பிரதமர் இதன் போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சம்பந்தமாகவும் விரிவாக தெளிவுப்படுத்தியுள்ள பிரதமர், போர் நடைபெற்ற காலத்தில் கைப்பற்றிய தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான நடத்தப்படும் விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு எந்த சர்வதேச அமைப்பும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.

எனினும் தற்போதைய நிலைமையின் கீழ் மனித உரிமைகளை பாதுகாக்கும் விதம் தொடர்பில் செயற்பட வேண்டிய அத்தியவசியம் இருக்கின்றது.

உண்மையை கண்டறியதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: