மருத்துவமனையில் திருநங்கை பரிதாப பலி! எவ்வாறு இறந்தார் ? விசித்திர சம்பவம்

alizaபாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரை சேர்ந்தவர் அலிஷா திருநங்கை ஆவார்.அலிஷா  திருநங்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.மேலும் திருநங்கைகள் ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்தார்.திருநங்கைகள் நலனுக்காக போராடி வந்தார்

சம்பவத்தன்று ஞாயிற்று கிழமை இரவு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து அலிஷா  துப்பாக்கியால் சுட்டு படுகாயம் அடைந்தார். அவரது உடலில் 8 குண்டுகள் பாய்ந்து இருந்தது. உடனடியாக அவரை பெசாவரில் உள்ள லேடி ரீடிங்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவர் மிகவும் ஆபாத்தான நிலைமையில் இருந்தார். அவருக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சை தேவைபட்டது.ஆனால் அவர் சிகிச்சை  பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

மருத்துவமனை உழியர்களின் அலட்சிய போக்காலும் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க தவறியதாலும் அவர் மரணம் அடைந்ததாக குற்றம்சாட்டபட்டு உள்ளது.

திருநங்கைகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பேஸ்புக்கில் தவறான அணுகுமுறையால் அலிஷா இறந்ததாக குற்றம் சாட்டி உள்ளனர்.

அலிஷாவை ஆண்கள் பிரிவில் சேர்க்கவா அல்லது பெண்கள் பிரிவில் சேர்க்கவா என மருத்துவமனை ஊழியர்கள் முடிவு செய்யமால் காலதாமதம் செய்து உள்ளனர்.பின்னர் திருநங்கைகள் போராட்டத்திற்கு பிறகு அலிஷா பெண்கள் வார்டில் சேர்க்கபட்டார். ஆனால் அங்குள்ள பெண் நோயாளிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு படுகாயத்துடன் அவர் 4 மணி நேரம் அலைக்கழிக்கபட்டு உள்ளார்.

பின்னர் அவர் ஒரு வழியாக சிகிச்சை அளிக்கபட்டு உள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்து உள்ளார்.

இது குறித்து  திருநங்கைகள் குழு உறுப்பினர்  குவாமர் நசீம் என்பவர் கூறும் போது கடந்த 2 வருடங்களில் இந்த மாகாணத்தில் 45  திருநங்கைகள் கொல்ல்பட்டு உள்ளனர்.திருநங்கைகளை இந்த சமூகம் ஏற்று கொள்வது இல்லை.  எங்களை திருமண விழாக்களில் நடனம்  ஆட அழைக்கிறார்கள். துப்பாக்கி முனையில் எங்களை மிரட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் பணம் பறிக்கிறார்கள்.அலிஷா இந்த மாகாணத்தில் எங்களுக்காக போராடி வந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.athirvu.com