இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது! லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

laxmanஇலங்கையின் சுயாதீன தன்மையில் இந்தியா தலையீடு செய்ய முடியாது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா உள்ளிட்ட எவருக்கும் அதற்கான அதிகாரம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சமஷ்டி கோரிக்கையினை வலியுறுத்தி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமஷ்டி ஆட்சியினை அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது.

இனவாதிகளின் கோரிக்கைக்கு இணங்கி இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது.

இவ்விடயத்தில், அரசாங்கம் நூறு வீத நம்பிக்கை கொண்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: