இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் த ஹிந்து செய்தித்தாளிடம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் வீ கே சிங்கை சந்தித்த போது, இலங்கையின் மனிதஉரிமை நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கருத்துரைத்த அவர். இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com
எந்த காலத்தில் இலங்கை அரசு வாக்குறுதியை நிரைவெற்றிஉல்லது ?
இவ்வுலகம் எல்லா மானிடர்களுக்கும் மகிழ்ச்சியாக வாழ ஒரு இடமாக இருக்க வேண்டும்– ஆனால் அது என்றுமே நடக்காது– ஒருகாலத்தில் அரசியல் கொள்கை ஒரு தடங்கலாக இருந்தது இப்போது இந்த கூறுகெட்ட மதம் ஒன்று அதனுடன் சேர்ந்து கொண்டு எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டு இருக்கிறது. எந்த நாட்டையுமே நம்ப முடியாது– தனக்கு அதனால் என்ன பலன் என்றே நினைக்கின்றன- மதங்கள் மனிதர்களை மனிதர்களாக செயல் பட வைக்காமல் மாக்களாக ஆக்கி -ஈவு இரக்கமின்றி உயர்வு தாழ்வு பேசி கொடுமைகள் இழைத்து பல கோடி மக்களின் வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி உள்ளது. கேட்க நாதி இல்லை– பேருக்குத்தான் ஐக்கிய நாட்டு சபை உள்ளது -அங்குள்ள மனித உரிமை சட்டங்களுக்கு எல்லா அரசுகளும் கை ஒப்பம் இட்டுள்ளன- என்ன பலன்? ஒன்றும் கிடையாது– தினசரி எவ்வளவு மக்களின் உயிர்கள் பல் வேறு சுய நல காரணங்களுக்காக எடுக்கப்படுகின்றன? உரிமைகள் எல்லாம் கிடைக்கின்றனவா? ஏன் மானிடர்களுக்கு இவ்வளவு கொடூர எண்ணங்கள்? அதுவும் ஆண்டவனின் பெரி நடக்கும் அநியாயங்களுக்கு அளவே கிடையாது? இப்போது இவ்வுலகில் எத்தனை கொடூர பைத்தியக்கார -தன்னை தலைவன் கூறிக்கொள்ளும் மனித உருவில் இருக்கும் சாத்தான்கள் இருக்கின்றனர்? மேற்க்கத்திய நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் பெரும்பாலும் ஏற்றுகொள்ளும் வகையில் இருக்கின்றது– மற்ற நாடுகளின் நிலை? சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகினும் என்ன பலன்?