கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியர் மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரிச்சர் ஹக்லே (30), என்பவர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் 2006 – 2014 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும், இதுதொடர்பாக சுமார் 20,000 ஆயிரம் ஆபாச புகைப்படங்களை தனது கணிணியில் சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலேசியாவில் இருந்து இங்கிலாந்துக்கு திரும்பிய இவரை கேட்விக் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹக்லே மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில் 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். எஞ்சிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள ஹக்லே மறுத்துள்ளார். இவர் மீதான வழக்கு இங்கிலாந்தில் உள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது, இந்நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி பிரைன் ஓ நெய்ல் கூறும் போது குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். இவர் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், அது போதிய தண்டனையாக அமையாது என கூறியுள்ளார், தற்போது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது