30 ஆண்டுகளுக்கு பின்னர் கனமழை! வெள்ள நீரில் மூழ்கிய பரிஸ் நகரம்

paris flood30 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்த கனமழையினால் பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன், கடந்தஇரு தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரான்ஸ் தலைநகர் பரிஸில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள Seine நதி பெருக்கெடுத்துள்ளதுடன், நீர் மட்டமும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவாறு உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், உயிராபத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன், தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மக்கள் சிறியளவிலான படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

Seine நதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக, நதிக்கரைக்கு அருகில் எவரையும் செல்ல வேண்டாம் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக இலங்கையில் கொழும்பின் பல பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com